இலங்கை
ஜனாதிபதியை சந்திக்கின்றன தொழிற்சங்கங்கள்
ஜனாதிபதி செயலகத்தில் இருந்து சாதகமான பதில் கிடைத்ததையடுத்து, தொழிற்சங்க கூட்டமைப்பு வியாழக்கிழமை (16) காலை தமது தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக கைவிட்டுள்ளது.
அடுத்த வார முற்பகுதியில் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜனாதிபதி விரும்புகிறார் என்று ஜனாதிபதி செயலகம் எழுத்துமூலம் தெரிவித்ததையடுத்து தாங்கள் வேலைநிறுத்தத்தை நிறுத்தியதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது.
தொழிற்சங்கத்தின் பங்குதாரர்கள், தமது எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கை குறித்து கலந்துரையாடுவதற்கும், அவர்களின் செயற்திட்டத்துக்கான காலவரையறையை நிர்ணயம் செய்வதற்கும் தற்போது கூட்டமொன்றை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தமது நடவடிக்கையை நிறுத்தினாலும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமது கோரிக்கைகளை சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி அரசாங்கம் வழங்குk் என்று ஜனாதிபதி செயலாளர் தமக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில் சில தொழிற்சங்கங்கள் மாத்திரம் தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டது.
சுகாதாரம், மின்சாரம் மற்றும் எரிசக்தி, கல்வி, துறைமுகங்கள், தபால் சேவைகள் போன்ற துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 40 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தில் ஈடுபட்டமையால் பொதுமக்கள் கடும் சிரமங்கை எதிர்கொண்டனர்.
வியாழக்கிழமை காலை வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டு ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், ரயில் பற்றாக்குறை காரணமாக பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகியதாக தெரியவருகிறது.
You must be logged in to post a comment Login