z p01 Fertiliser
இலங்கைசெய்திகள்

நாட்டை வந்தடைந்தது கப்பல் – விவசாயிகளுக்கு இலவச உரம்

Share

3 பயிர்ச்செய்கை காலங்களின் பின்னர் முதன்முறையாக இந்நாட்டு விவசாயிகளுக்கு நெற்செய்கைக்கு தேவையான சேற்று உரம் (TSP) ஏற்றிய MV INCE PACIFIC என்ற கப்பல் இன்று (16) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

அந்தக் கப்பலில் 36,000 மெட்ரிக் டொன் TSP உரம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் இதேபோன்ற மேலுமொரு சேற்று உரத்தை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைய உள்ளது.

ஐ நா உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் USAID நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த சேற்று உரம் (TSP) வழங்கப்பட்டுள்ளது. 2022/23 பெரும்போகத்தில் நெற் பயிர்ச் செய்கையை மேற்கொண்ட அத்துடன், 2023 சிறு போகத்தில் நெற்செய்கை மேற்கொண்டாலும் இல்லாவிட்டாலும், நாட்டில் உள்ள 12 இலட்சம் நெற்செய்கையாளர்களுக்கும் இந்த சேற்று உரத்தை இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன், விவசாயத் திணைக்களத்தின் பரிந்துரைக்கமைய ஒரு ஹெக்டயருக்கு 55 கிலோ கிராம் வீதம் இந்த உரம் இலவசமாக வழங்கப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...