இலங்கை
மட்டுப்படுத்தப்படும் அரச அதிகாரிகளின் செலவுகள்!!
நாட்டிலிருந்து வெளியேறும் பெருமளவான அந்நிய செலவாணியை சேமிப்பதற்காக அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்படும் கொடுப்பனவுகள் மற்றும் அது தொடர்பான செலவுகளை மார்ச் 20 ஆம் திகதி முதல் மட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அமைச்சர்கள், ஆளுநர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபைத் தலைவர்கள், மேயர்கள் மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள் ஆகிய அனைவரும் இந்த முடிவுக்குள் அடங்குவர் என தெரிவிக்கப்படுகிறது.
மே மாதம் 15 ஆம் திகதி 2015 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்த சுற்றறிக்கையின் அடிப்படையிலே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கல்வி, பயிற்சிகள், திறன் அபிவிருத்தி , கலந்துரையாடல்கள், மாநாடுகள் போன்ற உத்தியோகபூர்வ பயணங்களின் அடிப்படையில் கொடுப்பனவுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் குழுவை வழிநடத்தும் அமைச்சின் செயலாளரின் வேண்டுகோளின் பேரில் வழங்கப்படக்கூடிய 750 அமெரிக்க டொலர் பொழுதுபோக்கு கொடுப்பனவை முற்றாக இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
#SriLankaNews
You must be logged in to post a comment Login