1667784466 sri lankan boat 2
இந்தியாஇலங்கைசெய்திகள்

யாழ் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் கைது!!

Share

யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 16 இந்திய கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் – புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த கடற்தொழிலார்கள் இரு படகுகளில் எல்லை தாண்டி, கடற்தொழிலில் ஈடுபட்டு இருந்த வேளை இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் கடற்பரப்பில் நான்கு கடற்தொழிலாளர்களும்,  பருத்தித்துறை கடற்பரப்பில் 12 கடற்தொழிலார்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் படகுகளும் கைப்பற்றப்பட்டன

கைது செய்யப்பட்டவர்கள் மயிலிட்டித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக நடவடிக்கைக்காக நீரியல் வளத்துறை திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

காரைநகர் கடற்பரப்பில் கைதான நால்வரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் , பருத்தித்துறை கடற்பரப்பில் கைதான 12 பேரையும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...