Connect with us

இலங்கை

நால்வர் மரணம் – பொலிஸார் விசேட அறிவிப்பு!

Published

on

death

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் மரணம் தொடர்பில் பகுப்பாய்வு அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான காரணத்தை கூற முடியும் என வவுனியா பொலிசார் நேற்று (11) தெரிவித்துள்ளனர்.

வவுனியா, குட்செட் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து கடந்த செவ்வாய்கிழமை (07) காலை தம்பதிகள் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகள் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.

சிவபாலசுந்தரம் கௌசிகன் என்ற 42 வயதுடைய நபர், அவரது மனைவி 36 வயதுடைய கௌசிகன் வரதராஜினி மற்றும் மகள்களான 09 வயதுடைய கௌசிகன் மைதிரா மற்றும் 03 வயதான கௌசிகன் கேசரா ஆகியோரின் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.

வவுனியா நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை புதன்கிழமை (08) இரவு மேற்கொள்ளப்பட்ட போதிலும், மரணத்திற்கான சரியான காரணம் வெளியாகவில்லை. ஆனால் அவர்கள் நஞ்சு அருந்தவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, உயிரிழந்தமைக்கான சரியான காரணத்தை கண்டறிய உடல் உறுப்புகள் மற்றும் இரத்த மாதிரிகள் அரசாங்க மரண விசாரணை திணைக்களம் மற்றும் மருத்துவ ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் முடிவுகள் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெறும். அதன் முடிவுகள் வந்த பின்னரே மரணத்திற்கான காரணத்தை கூற முடியும். குறித்த சம்பவம் தொடர்பில் சிசிரிவி காட்சிகள் மற்றும் வாக்குமூலங்கள் பெறப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

#SriLankaNews

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

tamilni 576 tamilni 576
ஜோதிடம்19 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – 27.02.2024 – Rasi Palan Today

இன்றைய ராசி பலன்கள் – 27.02.2024 – Rasi Palan Today சோபகிருது வருடம் மாசி மாதம் 15 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 27.02.2024. சந்திர பகவான்...

tamilni 555 tamilni 555
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 26.02.2024 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 26.02.2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் பிப்ரவரி 26, 2024, சோபகிருது வருடம் மாசி 14, திங்கட் கிழமை, சந்திரன்...

tamilni 528 tamilni 528
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 25.02.2024 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 25.02.2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் பிப்ரவரி 25, 2024, சோபகிருது வருடம் மாசி 13, ஞாயிற்று கிழமை, சந்திரன்...

tamilnaadi 119 tamilnaadi 119
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 24.02.2024 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 24.02.2024 – Today Rasi Palan Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (பிப்ரவரி 24, 2024 சனிக் கிழமை) இன்று சந்திரன்...

tamilni 493 tamilni 493
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 23.02.2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 23, 2024, சோபகிருது வருடம் மாசி 11, வெள்ளிக் கிழமை, சந்திரன் கடகம், சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள மூலம்,...

tamilni 461 tamilni 461
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 22.02.2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 22, 2024, சோபகிருது வருடம் மாசி 3, வியாழக் கிழமை, சந்திரன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிகம், தனுசு ராசியில் உள்ள கேட்டை,...

tamilni 434 tamilni 434
ஜோதிடம்7 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 21.02.2024 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 21.02.2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் பிப்ரவரி 21, 2024, சோபகிருது வருடம் மாசி 9, புதன் கிழமை, சந்திரன்...