அரசியல்
பயங்கரவாதிகளாக சித்தரித்து மாணவர்கள் பாதையை மாற்றாதீர்!!
அஹிம்சை வழியில் போராடும் மாணவர்களைப் பயங்கரவாதிகளாக இந்த அரசாங்கம் சித்திரிக்குமாக இருந்தால், அவர்களின் பாதை மாறக்கூடிய சூழல் ஏற்பட்டு விடுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. வினோநோகராதலிங்கம் எச்சரித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான முதல்நாள் விவாதத்தில் உறையாற்றும்போதே இவ்வாறு எச்சரித்த அவர் மேலும் கூறுகையில்,
ஒரு ஜனநாயக நாட்டில் ஜனநாயகம் மரணிக்காது உயர்த்துடிப்புடனும் இயங்கிக் கொண்டிருக்கும் குறிகாட்டியே தேர்தல். அதாவது மக்களுக்கான வாக்குரிமை. மக்களது விருப்புக்கு மாறாக அரசியலமைப்புக்கு முரணாக நமது நாட்டில் நடைபெற வேண்டிய தேர்தல்கள் அனைத்தும் அரசாங்கம் தோல்வியடைந்து விடுவோமா என்ற காரணத்துக்காக ஒத்திவைக்கப்படுகின்றன இதுவே எமது நாட்டின் ஜனநாயன பெருமை.
பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் மீது அரச படையினர் , குண்டர் படையினர் திட்டமிட்ட வகையில் தாக்குதல் நடத்தினார்கள். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் எதிராகவும் பொருட்களின் விலையேற்றத்துக்கு எதிராகவும் மாணவர்கள் இன்று போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அவர்களை அரசு பயங்கரவாதிகள் என சொல்லுகின்றது. அரசியல் கட்சிகளின் பயங்கரவாதிகள் என கூறுகின்றார்கள். அஹிம்சை வழியில் பேராடுபவர்களை நீங்கள் பயங்கரவாதிகள் என கூறினால் அவர்களின் பாதை மாறக்கூடிய சூழல் ஏற்பட்டு விடும் – என்றார்.
You must be logged in to post a comment Login