இலங்கை
மாணவர்கள் நலனை கருத்திற் கொண்டு ஒத்துழையுங்கள்


க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பிடும் நடவடிக்கைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் விடைத்தாள்களை மதிப்பிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, ஆகையால், மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு ஆசிரியர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் சுசில் பிரேம்ஜயந் கேட்டுக்கொண்டார்.
விடைத்தாள்களை மதிப்பிடும் நடவடிக்கைகளுக்காக 20,000 ஆசிரியர்கள் அவசியமாக உள்ள நிலையில், 16,000 ஆசிரியர்களே இதுவரை அதற்காக பதிவு செய்துள்ளனர்.
மேலும் 4,000 ஆசிரியர்களுக்கான குறைபாடு நிலவுகின்றது என்றார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் எதிர்க்கட்சி எம்பி புத்திக பத்திரண எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு வேண்டுகோள் விடுத்த கல்வி அமைச்சர் மேலும் கூறுகையில்,
அவர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் பிரச்சினைகள் காணப்பட்ட நிலையில் அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவற்றுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு இறுதி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் கொடுப்பனவு வழமையாக வழங்கப்படும் கொடுப்பனவிலிருந்து சுமார் இரண்டு மடங்காக வழங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
You must be logged in to post a comment Login