இலங்கை
இலங்கை வருகிறது சீன பயணிகள் குழு
கொவிட் 19 தொற்றுநோய்க்குப் பிந்தைய சீன சுற்றுலாப் பயணிகளின் முதல் குழு இலங்கையை வந்தடையவுள்ளது.
குறித்த சீன சுற்றுலா பயணிகளுடன் மார்ச் 3 ஆம் திகதி ஷாங்காய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சீன விமானம் புறப்படும்.
“சீன சுற்றுலாப் பயணிகள் விரைவில் திரும்பி வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், ஆனால் அவர்களின் குறிப்பிட்ட ஆர்வம் சீனாவுக்கு நெருக்கமான நாடுகளுக்கு உள்ளது” என்று ஷாங்காய் நகரில் உள்ள இலங்கையின் தூதரகத்தின் தூதரக அதிகாரி அனுர பெர்னாண்டோ, சீனா ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.
20 நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு பயணிக்க பயண முகவர் குழுக்கள் முன்பதிவு செய்ய அனுமதிக்கும் முடிவை சீன கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம் கடந்த பெப்ரவரி 6 ஆம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login