அரசியல்

ரணில் உண்மையான முகத்தை காட்டிவிட்டார்!!

Published

on

“இலங்கையின் சுதந்திர தினத்தன்று குல்லா அணிந்து எதிர்ப்பு தெரிவித்துவிட்டு யாழில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி ரணிலுடன் சொந்தம் கொண்டாடி 13ஆவது திருத்தம் தருவார் என்ற இந்திய கூலிப்படைகள் எல்லோருக்கும் சேர்த்து மாவட்ட சபைகள் தான்தரமுடியம் என்று ரணில் ஆப்பு வைத்தார்” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு மட்டு அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் திங்கட்கிழமை நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர்,

“ 8ஆம் திகதியன்று கொள்கை விளக்கம் செய்த ரணில் 13ஆ திருத்தம் பற்றியோ மாகாணசபை பற்றியே  ஒரு வார்த்தை கூட இல்லை. மாறாக மாவட்ட அபிவிருத்தி சபை பற்றி அறிவித்தார். எல்லாருக்கும் ரணில் ஆப்பு வைத்துள்ளார்.

இந்த ரணில் தான் தமிழீழ தேசத்துக்கு உரிமை கொடுக்க இருந்தவராம். இவரை பகிஷ்கரித்தது நாங்கள் செய்த அநியாயமாம்.

இந்தளவுக்கு ஒரு கேவலம் கெட்ட தலைமைத்துவத்தை வைத்துதான் நாங்கள் எப்போவே அழிந்திருக்க வேண்டியது. இந்த தலைவர்கள் எப்போதோ அழித்திருப்பர். இன்று கோவணம் அறுந்து போயிருக்கிறது. ரணில் தன்னுடைய உண்மையான முகத்தை காட்டியுள்ளார்.

குல்லா போட்டு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு யாழில் ரணிலுடன் சொந்தம் கொண்டாடினர். சிறிலங்கா சுதந்திர தினத்துக்கு காலை சாப்பிடதை மத்தியானம் மறந்துவிடுகின்ற கும்பல்தான் இவர்கள்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஸ்தாபிக்கப்பட்ட நாளில் இருந்து மக்களுக்கு தெளிவான செய்தியை சொல்லிவருகின்றோம். காலத்துக்கு காலம் மாற்றப்படுகின்ற செய்தி அல்ல.

தமிழ் தேசிய தவைலரால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து என்றைக்கு விலகவேண்டி வந்ததோ. அதற்கான காரணங்கள் அன்று தொடக்கம் இற்றைவரைக்கும் மாறாமல் ஒரே ஒரு விடயமாகத்தான் இருக்கின்றது

1987ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர்  13ஆவது திருத்தச்சட்டமான மாகாணசபை முறைமையை நிறைவேற்றிய நாளில் இருந்து, அதனை விடுதலைப் புலிகள் மாத்திரமல்ல முதலாம் கட்டமாக இந்திய படைகளுடனும் பின்னர் இரண்டாம் கட்டாக சிறிலங்கா அரசாங்கத்துடனும் சேர்ந்து போராட்டத்தை காட்டிக் கொடுத்த தரப்புக்களான புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் என அனைவரும் நிராகரித்தனர்..

ஈ.பி.ஆர்.எல்.எப் மட்டும்தான் 87ஆம் ஆண்டு வடகிழக்கில் போட்டியிட்டு முதலமைச்சர் பதவியை பெற்று ஒரு சில மாதங்களிலே அந்த பதவிகளை வைத்து சாதிக்க முடியாது என்று தமிழீழத்தை பிரகடனப்படுத்தி இந்தியாவுக்கு ஓடிச் சென்றனர்

2009 மே 18ஆம் திகதி விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டது, 21 ம் திகதி இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கே.எம்,நாராயணன் இலங்கைக்கு வந்தார்.

அப்போது தமிழ் தேசிய  கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளை சந்தித்தது, இனழிப்பு நடைபெற்ற தருணத்திலே 2009ஆம் ஆண்டு அதனை தீர்வாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டார். அதனை எதிர்த்தது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மட்டும்தான்.

கூட்டமைப்பு மைத்திரி ரணிலுடன் சேர்ந்து தயாரித்த 2015 ஆரம்பித்து 2017 செப்டெம்பர் வெளியிட்ட அந்த இடைக்கால அறிக்கை சிங்களத்திலே மிகத் தெளிவாக இலங்கை ஏக்கிய ராச்சிய, ஒற்றையாட்சி என்று பதிவு செய்யப்பட்டது

தமிழில் ஒருமித்த நாடு என்ற பூச்சாண்டியை காட்டி தமிழ் மக்களே விரும்பி ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்ளவைக்கும் சதி 2018 நடந்த உள்ளூராட்சி தேர்தலிலே மக்களிடம் ஒற்றையாட்சிக்கான ஆணையைக் கேட்டுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட்டது. அதில் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்தினோம்” என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version