அரசியல்
தேர்தல் தடைப்பட வாய்ப்பு??


தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகுவதால் தேர்தலை நடத்துவதற்கு தடையேற்படாது என்றும் ஒரு உறுப்பினர் விலகுவதால் ஆணைக்குழுவின் கூட்டங்களை நடத்துவதற்கு தேவையான கோரத்தை பேணுவதற்கு தடையாக இருக்காது என்றும் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
மேலும், தான் பதவி விலகுவதாக வெளியாகும் தகவல்கள் பொய்யானவை என்றும் வதந்திகளுக்கு பதிலளிப்பதில் எவ்வித பயனும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் ஆணைக்குழுவில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவாவும் பதவி விலகியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், அதுகுறித்து விளக்கமளித்த அவர், தான் பதவி விலகுவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் சாள்ஸ் விலகியமை குறித்து இதுவரை தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகுவதால் தேர்தலை நடத்துவதற்கு தடையேற்படாது எனவும் ஒரு உறுப்பினர் விலகுவதால் ஆணைக்குழுவின் கூட்டங்களை நடத்துவதற்குத் தேவையான கோரத்தை பேணுவதற்கு தடையாக இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.