இலங்கை
அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு


செத்தல் மிளகாய், அரிசி, பருப்பு உள்ளிட்ட 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை நாளை (26) முதல் அமுலாகும் வகையில் குறைக்கவுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் குறைக்கப்பட்ட விலைகளில் 6 பொருட்களையும் கொள்வனவு செய்ய முடியுமென சதொச அறிவித்துள்ளது.
ஒரு கிலோ கிராம் செத்தல் மிளகாயின் விலை 30 ரூபாயால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 1,700 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ கிராம் வெள்ளை பச்சை அரிசி 10 ரூபாய் குறைக்கப்பட்டு 169 ரூபாக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒரு கிலோகிராம் சிவப்பு அரிசி 8 ரூபா குறைக்கப்பட்டு 179 ரூபாய்க்கும் ஒரு கிலோகிராம் வௌ்ளை நாடு (உள்நாடு) 5 ரூபாய் குறைக்கப்பட்டு 184 ரூபாக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக சதொச அறிவித்துள்ளது.
மேலும், ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பு மற்றும் கீரி சம்பா ஆகியவை தலா 5 ரூபாயால் குறைப்பட்டு முறையே 365 மற்றும் 235 ரூபாகளுக்கு விற்பனை செய்யப்படவுள்ளன.