இலங்கை
இனி பணிப்பெண்கள் கிடையாது!!
இலங்கையைச் சேர்ந்த பெண் தொழிலாளர்களை வீட்டுப் பணிப்பெண்களாக அனுப்புவது அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, திங்கட்கிழமை (19) தெரிவித்தார்.
சர்வதேச தரத்துக்கு அமைய இலங்கையர்களை உள்நாட்டு உதவியாளர்களாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சட்டரீதியில் இலங்கையர்கள் செல்வதை உறுதிப்படுத்தவும், அவர்களின் வருமானத்தை சட்டரீதியாக நாட்டுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.
நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக, 2022 ஆம் ஆண்டில் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த பணியார்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பதிவுசெய்து வசதிகளை வழங்கியதாகவும் சுட்டிக்காட்டினார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login