இலங்கை
அரியவகை விலங்குடன் முல்லையில் ஒருவர் கைது!


முல்லைத்தீவு மாவட்டத்தில் காடுகளில் வாழும் அரியவகை மிருகங்களில் ஒன்றான பாரிய அ
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் தேராங்கண்டல் பகுதியில் இறைச்சிக்கு பயன்படுத்த இருந்த நிலையில் இருந்த ஆமடில்லா (அழுங்கு) என்று அழைக்கப்படும் காட்டு விலங்கு கிளிநொச்சி மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து துணுக்காய் தேராங்கண்டல் பகுதியில் சந்தேக நபர் ஒருவரின் வீட்டை சோதனை செய்த போது குறித்த காட்டு விலங்கு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கை செய்யப்பட்டுள்ள 40 வயதுடைய சந்தேக நபரை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.