இலங்கை
மலேசியா செல்ல முற்பட்ட இலங்கையர்கள் கைது!


சுற்றுலா விசா ஊடாக வேலைவாய்ப்பை எதிர்ப்பார்த்து மலேசியா செல்ல முற்பட்ட 9 இலங்கையர்கள் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குறித்த 9 இலங்கையர்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது..
4 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் இவர்களுள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஒன்பது பேரும் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.