இலங்கை
மக்களின் நம்பிக்கைக்குரிய நபராக நந்தலால் வீரசிங்க!
தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதில், பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் இலங்கை மக்கள் மத்தியில் மிகவும் நம்பிக்கைக்குரிய நபராக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க காணப்படுகின்றார் என மாற்றுக் கொள்கைக்கான மையம் நடத்திய ‘பொருளாதார சீர்திருத்த சுட்டெண்’ கணக்கெடுப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பின் தள்ளி அவர் முன் வந்துள்ளார். அதற்கமைய, நாட்டு மக்கள் மத்திய வங்கி ஆளுநர் மீது 56.6 சதவீதம் நம்பிக்கை வைத்திருப்பதாக குறித்த கணக்கெடுப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கணக்கெடுப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது 44.5 சதவீத மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதுடன், எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மீது 42.7 சதவீத நம்பிக்கையும், கோப் குழுத் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார மீது 24.7 சதவீத நம்பிக்கையும், எதிர்க்கட்சி உறுப்பினர் சம்பிக்க ரணவக்க மீது 23.1 சதவீத நம்பிக்கையும் மக்கள் கொண்டுள்ளதாக மாற்றுக் கொள்கைக்கான மையம் தெரிவித்துள்ளது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login