இலங்கை
மின்சாரம், எரிபொருள் கட்டணங்கள் மீண்டும் அதிகரிப்பு!


எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் மின்சாரம், எரிபொருள், ரயில் மற்றும் பஸ் கட்டணங்கள் 15 வீதத்தால் அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 பாதீட்டு முன்மொழிவின் படி, இந்தக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.
எனினும், இது தொடர்பில் வரி மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர அனைத்து அரசுக் கட்டணங்களும் 20 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளன.
இதன் கீழ் திருமண பதிவுக் கட்டணம், நிறுவன பதிவுக் கட்டணம், நெடுஞ்சாலைக் கட்டணம் உள்ளிட்ட பல சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.