இலங்கை
போதைக்கு அடிமையாகிய 121 பேருக்கு புனர்வாழ்வு!


வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் போதைப் பாவனைக்கு அடிமையாகிய 121 பேர் நீதிமன்ற உத்தரவின்பேரில் தங்கவைக்கப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
வடபகுதியை சேர்ந்த இளைஞர்களே போதைக்கு அடிமையாகிய நிலையில் பொலிசாரால் அழைத்து வரப்பட்டு தங்கவைக்கப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்பட்டு வருகின்றனர்.
இவர்களில் கடந்த 15 ஆம் திகதி ஐவர் குறித்த புனர்வாழ்வு நிலையத்திலிருந்து தப்பித்து சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.