இந்தியா
இலங்கையர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை!


தமிழ்நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள மூவருக்கு எதிராக இந்திய தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
சந்தேகநபர்கள் கடந்த மே மாதம் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் பயணித்த வேனில் சில ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பைப் போன்று மற்றுமொரு அமைப்பைக் கட்டியெழுப்ப இந்த சந்தேகநபர்கள் செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.