இலங்கை
அதிக விலைக்கு முட்டை விற்பனை! – 1,120,000 ரூபா அபராதம்


கட்டுப்பாட்டு விலையை மீறி முட்டைகளை அதிக விலைக்கு விற்பனை செய்த இரு வர்த்தகர்களுக்கு 1,020,000 ரூபா அபராதமும் 100,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அவிசாவளை பிரதேச வர்த்தகர் ஒருவருக்கு 1,020,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், தெமட்டகொட பிரதேச வர்த்தகர் ஒருவருக்கு 1 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அனுராதபுரத்தில் அதிகபட்ச சில்லறை விலையை மீறி அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த 4 வர்த்தகர்களுக்கு தலா 100,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.