இலங்கை
திருப்பி அனுப்பாதீர்கள்! – வியட்நாமில் இலங்கை அகதிகள் கோரிக்கை


20 குழந்தைகள், 19 பெண்கள் உள்பட கப்பல் மூலம் கனடா செல்ல முறைப்பட்ட கப்பல் மூழ்கிய நிலையில், நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த 317 இலங்கை அகதிகள் மீட்கப்பட்டு வியட்நாம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட இலங்கை அகதிகள், வியட்நாமில் தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில், இலங்கை அகதிகளை நாட்டுக்கு கொண்டு வர முயற்சி எடுக்கப்படும் என்று இலங்கை கடற்தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதேவேளை,அகதிகளை இலங்கைக்கு திரும்ப அனுப்ப வியட்நாம் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் வியட்நாமில் உள்ள அகதிகள், தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் என வெளியாகி இருக்கிறது.
இலங்கையில் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வாழ முடியாத சூழல் உள்ளது. எனவே எங்களை அங்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.