இந்தியா
வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு


தென்மேற்கு வங்க கடல், இந்திய பெருங்கடல் பகுதியில் 4.5 கி.மீ உயரத்திற்கு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதனால், வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியால் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நாளை மறுநாள் முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.