இலங்கை
மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு??


உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் சிலிண்டர்களை தொடர்ந்தும் சந்தைக்கு விநியோகித்து வருவதாகவும் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் ஆகிய எரிவாயு நிறுவனங்கள், இன்று (08) அறிவித்தன.
எனினும், லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் ஆகிய இரண்டு வகையான எரிவாயுக்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுவதாக பாவனையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இரண்டு நிறுவனங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இருவர், தட்டுப்பாடு இன்றி எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகித்து வருவதாக அறிவித்தனர்.
மேலும், ஏதேனும் ஒரு பகுதியில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டால் நிறுவனத்துக்கு தெரியப்படுத்துமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ. கே. எச். வேகபிட்டியவும் தமது நிறுவனம், எரிவாயு சிலிண்டர்களை தட்டுப்பாடு இன்றி விநியோகித்து வருவதாக சுட்டிக்காட்டினார்.