இலங்கை
தமிழ் அரசியல் கைதிக்கு விருது


தமிழ் அரசியல் கைதியான பொருளியலாளர் சிவலிங்கம் ஆரூரன் எழுதிய “ஆதுரசாலை” என்ற தமிழ் நாவலுக்கு சிறந்த நாவலுக்கான விருது வழங்கப்பட்டது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்விலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு – பித்தலை சந்தியில் 2006ம் ஆண்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, அவர் தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.
சிறையில் இருந்தவாறே, புத்தகமொன்றை எழுதியமைக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறைச்சாலையில் இருந்தவாறே, சிவலிங்கம் ஆருரன் 8 புத்தகங்களை எழுதியுள்ளார்.
இந்த 8 புத்தகங்களும், அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வுக்கு, பரிந்துரை செய்யப்பட்டமை விசேட அம்சமாகும்.