இலங்கை
கோண்டாவிலில் கசிப்பு குடோன் முற்றுகை


கோண்டாவில் பகுதியில் கசிப்பு காய்ச்சிய இடம் பொலிஸரால் முற்றுகையிடப்பட்ட நிலையில், கசிப்பு காய்ச்சியவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
தொழிற்சாலை ஒன்றினை நடத்துவது போன்ற பாவணையிலேயே கசிப்பு காய்ச்சும் நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியிலிருந்து 60 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு காய்ச்ச பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன பொலிஸரால் மீடகப்பட்டுள்ள நிலையில், கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.