இலங்கை
நாவற்குளியில் வாள்வெட்டுக் கும்பல் அட்டாகசம்


சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குளி புதிய குடியேற்றப் பகுதியில் இரு குழுக்குகளுக்கு இடையில் இடம் பெற்ற வாள் வெட்டுத் தாக்குதலில், ஒருவர் காயமடைந்துள்ளதுடன், இரு வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளது.
ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு குழுக்களுக்கு இடையில் தொடர்ச்சியாக முரண்பாடு நீடித்து வந்த நிலையிலேயே இச்சம்பம் இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு ஒரு குழுவைச் சேர்ந்தவரின் வீடு மற்றைய குழுவினரால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன, ஒருவர் மீது வாள்வெட்டுத்தாக்குதலும் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, தாக்குதலுக்கு உள்ளான மற்றைய குழுவினர் இரவு 11.00 மணியளவில் மற்றைய குழுவைச் சேர்ந்த ஒருவரின் வீட்டினை சேதப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவங்களால் குறித்த பகுதியில் பதற்றமான நிலைமை நீடித்து வருவதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட நிலையில், இன்று காலை (24) சம்பவம இடத்திற்கு விரைந்த பொலிஸார் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.