இலங்கை
போசாக்கின்மையால் சிறுவர்கள் கல்வி பாதிப்பு – உதவிக்கரம் நீட்டக் கோரிக்கை!
பெற்றோரின் பொருளாதார நிலைமை காரணமாக வேலணை பிரதேசத்தில் முன்பள்ளி சிறார்களிடையே போசாக்கின்மை நிலை உருவாகி வருகின்றது. இது சிறார்களின் கல்வியை பெரிதும் பாதிப்படையச் செய்கின்றது.
இதிலிருந்து சிறார்களை மீட்டெடுக்க உதவிக்கரம் நீட்டுங்கள் என வேலணை பிரதேச முன்பிள்ளைப்பிராய அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சயானி பாலமுரளி கோரிக்கை விடுத்துள்ளார்.
தேவா திறந்தவெளி அரங்கில் வேலணை பிரதேச முன்பள்ளி சிறுவர் ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகவு இன்றையதினம் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்புரையாற்றிய வேலணை பிரதேச முன்பிள்ளைப்பிராய அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சயானி பாலமுரளி மேலும் கூறுகையில் –
தற்பாதுள்ள பொருளாதார நெருக்கடி நிலைகாரணமாகவும் இதர பல காரணங்களாலும் எமது வேலணை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிக்குள் பல சிறார்களிடையே மந்த போசாக்கு நிலை காணப்படுகின்றது.
இதனால் பல சிறார்கள் முன்பள்ளிக்கு கற்றல் செயற்பாடுகளுக்கு வருகைதராத துர்ப்பாக்கிய நிலை உருவாகின்றது.
இந்நிலை தொடர்ந்தால் எமது இளம் சிறார்களின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும் நிலை உருவாக்கிவிடும்.
இதனால் இப்பிரதேச சிறார்களின் போசாக்கு தொடர்பில் பொதுமக்களும் தன்னார்வலர்களும் அதிக அக்கறை செலுத்தவேண்டும்.
குறிப்பாக எமது வேலணை பிரதேசத்தில் 35 முன்பள்ளிகள் உள்ளன.
இவற்றுள் புங்குடுதீவில் உள்ள ஒரு முன்பள்ளி தற்போது செயற்பாடாத நிலையில் காணப்படுகின்றது.
அத்துடன் நயினாதீவு பகுதியிலுள்ள 4 முன்பள்ளிகளுக்கு தனியார் போசாக்குணவு வழங்க அனுசரணை வழங்கிவருகின்றனர்.
இதேவாளை 7 முன்பள்ளிகளுக்கு போசாக்குணவு வழங்குவதற்கு இதுவரை எந்தவொரு வழிமுறையும் கிடைக்கத நிலையே காணப்படுகின்றது.
இந்த 7 முன்பள்ளிகளது மாணவர்களுக்கு போசாக்குணவு வழங்குவது தொடர்பில் தன்னார்வலர்கள் முன்வரவேண்டும்
என அழைப்பு விடுத்துள்ள முன்பிள்ளைப்பிராய அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறார்களின் எதிர்காலம் சிறப்பாக உருவாக தானும் பலவழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#srilankanews
You must be logged in to post a comment Login