அரசியல்
இரவு நேர பொருளாதாரம் பற்றி சிந்திக்க வேண்டும்!
” இரவு நேர பொருளாதாரம் என்பது பாலியல் தொழில் மட்டும் அல்ல. அது தொடர்பில் தவறான புரிதல் வேண்டாம்.” – என்று இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.
” இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இரவு 10 மணிக்கு பின்னர் அறைகளில் முடங்கியிருப்பதற்கு இங்கு வருவதில்லை. எனவே, இரவு நேர பொருளாதாரம் பற்றி சிந்திக்க வேண்டும்.
இசை நிகழ்ச்சிகள், இரவு நேர சந்தைகள், உணவு விழாக்கள் என்பவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும். எனவே, இரவு நேர பொருளாதாரம் என்பது பாலியல் தொழில் மட்டும் அல்ல. அது எந்நேரத்திலும் நடக்கின்றது.
சவூதி அரேபியாவில் சரியா சட்டம் தீவிரமாக கடைப்பிடிக்கப்படுகின்றது. ஆனால் சுற்றுலா பயணிகளுக்காக கசினோ திறப்பதற்குகூட ஏற்பாடு நடக்கின்றது.
எனவே, எமது நாட்டிலும் கலாசாரத்தை பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கி பயணிப்பது குறித்து சிந்திக்க வேண்டும்.” – எனவும் டயானா கமகே குறிப்பிட்டார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login