இலங்கை
நாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு!


நாட்டில் இக்காலப்பகுதியில் வீடு உடைப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீடு உடைப்பு, திருட்டு, கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் வாகனங்களை கொள்ளையிடுதல் போன்ற பாரிய சம்பவங்களுடன் சிறு திருட்டு உட்பட நாளாந்தம் 100 சம்பவங்கள் இடம்பெறுவதாக நாடு முழுவதுமுள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் பெரும்பாலும் போதை வஸ்துக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.