இலங்கை
மஹிந்த தலைமையில் மீண்டும் ஆட்சி!


” மஹிந்த ராஜபக்ச தலைமையில், மொட்டு கட்சி ஆட்சி விரைவில் மலரும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டமொன்று நாமல் ராஜபக்ச தலைமையில் இன்று கண்டியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் என்பன நடைபெறுவதற்கு இன்னும் காலம் உள்ளது. உள்ளாட்சி சபைத் தேர்தலும் அடுத்த வரும் மார்ச்சில்தான் நடைபெறும்.
டிசம்பர் ஆகும்போது நாட்டு பிரச்சினைகள் தீர்ந்திருக்கும்.
மஹிந்த ராஜபக்ச தலைமையில் மொட்டு கட்சி அரசாங்கம் உருவாகும்.” – எனவும் மஹிந்தானந்த குறிப்பிட்டார்.