அரசியல்
அரசாங்கத்துடன் டீலில் உள்ளவர்களே தேசிய பேரவை உறுப்பினர்கள்!


தேசிய பேரவைக்கு நியமிக்கப்பட்டுள்ளவர்களில் பலர், அரசாங்கத்துடன் ‘டீல்’ வைத்துள்ளவர்கள் என்று தேசிய தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
சர்வக்கட்சி அரசாங்கம் அமைக்கும் முயற்சி தோல்வி கண்டுள்ள நிலையில், மக்களை ஏமாற்றவே ‘தேசிய சபை’ நிறுவப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
” அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தேசியக் கொள்கைகளை உருவாக்குவதற்கு வழிகாட்டுவது தேசிய பேரவையின் பிரதான நோக்கமாக இருந்தாலும், தற்போது உருவாகியுள்ள பேரவை அந்த இலக்கை அடைவதை நோக்காக கொண்டது அல்ல.” – எனவும் அநுர குறிப்பிட்டார்.