அரசியல்
வைகோல் பட்டறை நாய் போலவே சஜித்தின் செயற்பாடுகள்!


” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் செயற்பாடுகள், வைகோல் பட்டறை நாய் போல்தான் உள்ளது.” -என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” பிரதமர் பதவியை ஏற்குமாறு சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த அழைப்பை அவர் ஏற்றிருந்தால் எவ்வித சிரமமும் இன்றி இன்று ஜனாதிபதி ஆகியிருக்கலாம். ஆனால் கிடைத்த வாய்ப்பை அவர் தறவிட்டுவிட்டார்.
எனவே, சவாலை ஏற்றவருக்கு அவர் வாய்ப்பை வழங்க வேண்டும். அதனை செய்யாமல் தற்போது எதிர்ப்பு அரசியலையே நடத்திவருகின்றார். அதாவது வைகோல் பட்டறை நாய்போலவே அவரின் செயற்பாடு அமைந்துள்ளது.” – எனவும் ரோஹித்த குறிப்பிட்டார்.