அரசியல்
இன்று கூடுகிறது நாடாளுமன்றம்!


நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
இதன்போது நாடாளுமன்றத்தில் புதிதாக அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள “தேசிய சபை” தொடர்பான பிரேரணைமீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
முற்பகல் 10.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை விவாதம் நடத்தப்பட்டு, குறித்த பிரேரணை நிறைவேற்றப்படவுள்ளது.
சபாநாயகர் தலைமையிலான தேசிய சபையில் ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்கள் 30 பேர்வரை அங்கம் வகிக்கவுள்ளனர்.
அதேவேளை ,23ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் பி.ப 12.30 மணி வரை இரண்டாவது எலிசபத் மகாராணியின் மறைவு குறித்த அனுதாபப் பிரேரணையையும், பி.ப 1.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல குறித்த அனுதாபப் பிரேரணையையும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.