இலங்கை
தங்கச் சங்கிலி அறுப்பு! – பொலிஸ் கான்ஸ்டபிள் கைது


மோட்டார் சைக்கிளில் பயணித்தவாறு, வீதியில் செல்லும் பெண்கள் அணிந்திருக்கும் தங்கச் சங்கிலிகளை பறித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக இரத்தினபுரி பாணமுர பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் தங்க சங்கிலிகளைப் பறிப்பதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர் இரத்தினபுரி, கல்தொட்ட நிலையத்தில் பணிபுரிவதுடன் கேரகல பொலிஸ் சோதனைச்சாவடியில் கடமையாற்றி வந்துள்ளார்.
பாணமுற பொலிஸ் பிரதேசத்தில் இரண்டு லட்ச ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலி, 138,000 ரூபா பெறுமதியான பெண்டனுடன் கூடிய தங்க சங்கிலி மற்றும் கட்டுவன பொலிஸ் பிரவேசத்தில் தங்கச் சங்கிலியை அறுத்ததில் இவருக்கும் தொடர்புள்ளது என இதுவரை மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.