இலங்கை
எனக்கும் அமைச்சு பதவி – கூறுகிறார் எஸ்.பி. திஸாநாயக்க
” 1994 இல் இருந்து அமைச்சு பதவிகளை வகித்தவன் நான், எனவே, அமைச்சு பதவி வழங்கப்பட்டால் அதனை ஏற்று சிறப்பாக செயற்படுவேன்.”
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
” இந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி, பிரதமருக்கு அடுத்தபடியாக உள்ள சிரேஷ்ட அரசியல்வாதி நான். எனவே, எனக்கு அமைச்சு பதவி வழங்கப்படும் என நம்புகின்றேன். தகுதியானவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட வேண்டும். இராஜாங்க அமைச்சு நியமனத்தில் அதனை காண முடியவில்லை.” – எனவும் எஸ்.பி. குறிப்பிட்டார்.
You must be logged in to post a comment Login