அரசியல்
மொட்டு எம்பிக்களை ஒன்றிணைக்க புதிய கூட்டணி
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான கூட்டணிலிருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் கட்சிகளை பொதுவானதொரு கூட்டணியின்கீழ் ஒன்றிணைப்பதற்கான பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன.
இதற்கான அரசியல் ரீதியிலான நகர்வுகளை முன்னெடுப்பதற்கு விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.
மொட்டு கூட்டணியில் இருந்து வெளியேறிய விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, அத்துரெலிய ரத்தன தேரர் உட்பட 8 கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து ‘மேலவை இலங்கை கூட்டமைப்பு’ எனும் பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.
அதேபோல டலஸ் அழகப்பெரும தலைமையிலான 13 எம்.பிக்கள் அடங்கிய குழுவும், ‘சுதந்திர மக்கள் சபை’ எனும் அரசியல் இயக்கத்தை உருவாக்கியுள்ளது.
அநுரபிரியதர்சன யாப்பா, சந்திம வீரக்கொடி உள்ளிட்டவர்கள் தனி அணியாக செயற்படுகின்றனர். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் தற்போது தனித்தே இயங்கிவருகின்றது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மேற்படி கட்சிகளை – சக்திகளை ஒரு குடையின் – கூட்டணியின்கீழ் கொண்டுவருவதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login