அரசியல்
ஒளிவு மறைவு இன்றி ஒன்றிணையுங்கள்! – புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு
” பிரச்சினைகளுக்கு பேச்சு மூலம் தீர்வு காண தேசிய ரீதியில் இணையுமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு எம்மால் முன்னெடுக்கப்படும் நகர்வு வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். இதில் ஒளிவு மறைவு இருக்கக்கூடாது. ”
இவ்வாறு நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன, மத, மற்றும் மொழி ரீதியாக காணப்படும் பிளவை – மோதல் தடுப்பதன் மூலம் கிராமிய மட்டத்தில் சமாதானத்தை உருவாக்க அரசியலமைப்பு சட்டக் கட்டமைப்பு உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
” இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக காணப்படும் பிரச்சினைகள் மற்றும் யுத்தத்தின் பின்னர் உருவான ஏனைய பிரச்சினைகளுக்காக தீர்வை காண்பது, அதனை சர்வதேசத்துக்கு கொண்டு செல்வது என்பவற்றை தேசிய பொறிமுறை மூலம் நம்பிக்கையான கலந்துரையாடல் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக புலம்பெயர் தமிழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.
தற்போது கனடா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் டயஸ்போராக்களின் தலைவர்களுடன் பேச்சு நடத்தியுள்ளேன். கலந்துரையாடல் மூலம் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இன, மத மற்றும் மொழி ரீதியாக மோதல்கள் ஏற்படுவதை தடுத்து மக்களிடையே ஒற்றுமை,நல்லிணக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும் நோக்கில் புதிய சட்ட கட்டமைப்பு ஒன்றை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.” – எனவும் அமைச்சர் கூறினார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login