அரசியல்
அடக்குமுறைகள் தொடர்பில் ஜெனிவாவில் நடவடிக்கை!
” ஆட்சியாளர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகள் தொடர்பில் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கவனத்தை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்படவில்லை. இதனால்தான் மக்கள் வீதிக்கு இறங்கினர். இந்நிலையில் அவர்கள் தற்போது வேட்டையாடப்படுகின்றனர். இதனை அனுமதிக்க முடியாது.
வலுவான அரசுகள் போராட்டங்களுக்கு அஞ்சுவதில்லை. தற்போதைய அரசாங்கம் பலவீனமாக இருப்பதால்தான், சிறு எதிர்ப்புகளுக்குக்கூட அஞ்சுகின்றது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. பெருமளவான இலங்கையர்கள் முறைப்பாடுகளை முன்வைப்பார்கள். பேரவையின் கவனத்தை ஈர்க்க நாமும் நடவடிக்கை எடுப்போம்.” – என்றார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login