இலங்கை
அமர்வில் பங்கேற்கும் பிரதிநிதிகளை குறைக்குக! – ஐ.நா. சபை உறுப்பு நாடுக்கு அறிவிப்பு
நியூயோர்க் நகரில் கொரோனா நோய் மீண்டும் தலைதூக்கியுள்ளதால், செப்ரெம்பர் 20 ஆம் திகதி தொடங்கும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது அமர்வில் பங்கேற்கும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை 3 முதல் 5 வரை குறைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை தனது 193 உறுப்பு நாடுகளுக்கு அறிவித்துள்ளது.
குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் மற்றும் அரசியல் தலைவர்கள் நேருக்கு நேர் சந்திக்கும் போது பிரதிநிதிகளின் எண்ணிக்கை 3 முதல் 5 வரை இருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது அமர்வில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவது ஜனாதிபதியா, வெளிவிவகார அமைச்சரா அல்லது தூதுவரா என்பது மிக முக்கியமான கேள்வியாக சண்டே ரைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் பொதுவாக இலங்கையிலிருந்து 132 பிரதிநிதிகள் பங்கேற்பதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்களில் பெரும்பாலோர் பொதுமக்களின் வரிப்பணத்தில் விடுமுறை எடுப்பதற்காக பிரதிநிதிகளாகப் பங்கேற்பதோடு, சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதிலும், அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தொழிலதிபர்களிடம் தள்ளுபடியில் பொருட்களை வாங்குவதிலும், அமெரிக்காவில் உள்ள உறவினர்கள், நண்பர்களைப் பார்ப்பதிலும் நேரத்தைச் செலவிடுகிறார்கள் என சண்டே ரைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த வருடமும் இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்றை பங்கேற்க வைப்பதென தீர்மானித்தால், அதில் எத்தனை பிரதிநிதிகள் அமெரிக்காவிடம் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர் என்பதை கூற முடியாது எனவும் அந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login