இலங்கை
அதிகரிக்கும் கொவிட் தொற்று! – நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை!
நாட்டில் தற்போது கொவிட் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கொவிட் மரணங்கள் பதிவாகாத நிலையில், தற்போது மீண்டும் உயிரிழப்புக்கள் அதிகமாக பதிவாகி வருகின்றன.
இந்தநிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பிள்ளைகளில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள் தவிர டெங்கு மற்றும் இன்புளுவன்சா நோயாளர்களும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த வாரத்தில் மூச்சுத் திணறல் (wheezing) நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் மருத்துவமனை தகவல்கள் கூறுகின்றன.
#SriLankaNews
You must be logged in to post a comment Login