இலங்கை
சீனக் கப்பலுக்கு அனுமதி வழங்கியது அரசு!
சீனக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர இடமளிப்பது தொடர்பில் அண்மையில் கூட தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதிக்க துறைமுக அதிகாரிக்கு வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
சீனாவின் யுவான் வாங் -5 கப்பல் இலங்கைக்குள் வருவதால், இந்தியாவுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் என்ன என்பதை எழுத்து மூலமாக தெரியப்படுத்துமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எனினும் இந்தியா இந்த கோரிக்கைக்கு இதுவரை பதிலளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன
இதனிடையே சீனாவின் கப்பல் நாட்டிற்கு நுழைய இடமளித்துள்ளமை சம்பந்தமாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், ஜனாதிபதியிடம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். எனினும் அந்த கப்பல் இலங்கைக்கு வருவதை எதிர்ப்பதற்கு நிலையான காரணங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என ஜனாதிபதி, அமெரிக்க தூதுவரிடம் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணங்களை முன்வைக்காத காரணத்தினால் சீனக் கப்பல், நாட்டுக்குள் வர , இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதனடிப்படையில் கப்பல் எதிர்வரும் 16 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் வந்து நங்கூரமிடப்படவுள்ளது. சீனாவின் இந்த கப்பல் குறைவான வேகத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி வந்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login