இலங்கை
டெங்கு காய்ச்சலின் புதிய பிறழ்வு அடையாளம்!
டெங்கு காய்ச்சலின் புதிய பிறழ்வு அடையாளம்!
நாட்டில் டெங்கு காய்ச்சலின் புதிய பிறழ்வு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜீ. விஜேசூரிய தெரிவிக்கையில்,
மக்கள் காய்ச்சல் ஏற்படின் உடனடியாக வைத்தியரை நாடவேண்டும். அத்துடன் சிறுவர்களுக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் அல்லது காய்ச்சல் ஏற்படுமாயின் உடனடியாக வைத்தியரை நாடுங்கள்.
டெங்கு நுளம்புகள் பரவாத வகையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியமாகும்.
வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு புதிய வகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. தொண்டைவலி, காய்ச்சல், இருமல், சளி போன்றவை புதிய வைரஸ் நோய்க்கான அறிகுறிகள் – என்றார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login