அரசியல்
அவசரகால எதிராகவே வாக்களிப்பு! – கூட்டமைப்பு உறுதி
அவசரகால சட்டத்துக்கு எதிராகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கும் என்று அக்கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
அவசரகால சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” ஜனநாயக வழியிலான போராட்டங்களை ஒடுக்கக்கூடாது. அவ்வாறு ஒடுக்க முற்பட்டதால்தான் இந்நாட்டில் ஆயுதப்போராட்டம்கூட ஏற்பட்டது. அந்தவகையில் அவசரகால சட்டத்தை கூட்டமைப்பு கடுமையாக எதிர்க்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சோரம் போய்விட்டதென சில புல்லுருவிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். கூட்டமைப்பு ஒருபோதும் சோரம் போகாது. முலுகெலும்புடன் செயற்படுவோம்.” – எனவும் செல்வம் எம்.பி. குறிப்பிட்டார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login