அரசியல்
ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பம்!


ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனையடுத்து ஜனாதிபதி செயலக வளாகமும் முற்றுகையிடப்பட்டது.
இதனால் குறித்த செயலகத்தின் பணிகள் 100 நாட்கள்வரை ஸ்தம்பித்தது.
குறித்த போராட்டக்காரர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டனர். இந்நிலையிலேயே செயலக பணிகள் மீள ஆரம்பமாகியுள்ளன.