அரசியல்
25ஆம் திகதி கூடுகிறது நாடாளுமன்றம்!


நாடாளுமன்றத்தை எதிர்வரும் 25ஆம் திகதி கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
எதிரணி பிரதம கொறடாவான நாடாளுமன்ற உறுப்பினர் லஷ்மன் கிரியல்ல, இது தொடர்பில் பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் உட்பட சமகால நிலைவரம் தொடர்பில் விவாதம் நடத்தவே நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.