இலங்கை
ஆசிரியர்களின் எரிபொருள் பிரச்சினைக்கு இதுவரை தீர்வில்லை! – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
Published
3 வாரங்கள் agoon
By
Thaaraga

கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட கரைச்சி கோட்டத்தில் உள்ள பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொடுக்க கல்வி வலயத்தினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இதுவரையில் கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட கரைச்சி கோட்டத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கு எரிபொருளை பெறுவதற்கான எரிபொருள் பங்கிட்டு அட்டையை வழங்குவதற்கு கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
ஆசிரியர்கள் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். இந்த விடயத்தில் கரைச்சி கோட்டக்கல்வி பணிப்பாளர் மற்றும் கிளிநொச்சி தெற்கு கல்வி வலய பணிப்பாளர் ஆகியோரே இதற்கு முழு பொறுப்பாகும்.
ஆகவே இந்த விடயத்தில் கவனம் செலுத்தி ஆசிரியர்களுக்கு எரிபொருள் பங்கீட்டு அட்டையை வழங்குகின்ற செயற்பாடுகளை வடக்கு மாகாண கல்வி அமைச்சு கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
You may like
பெரமுன தலைமையில் உதயமாகிறது புதிய அரசியல் கூட்டணி!
யாழ். மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட 1000 பேருக்கு எரிவாயு சிலிண்டர் விநியோகம்!
கள்ளநோட்டுடன் நல்லூரில் இளைஞன் கைது!
வடக்கு விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்களால் சுகவீன விடுமுறை போராட்டம்!
தமிழரசுக் கட்சியை சம்பந்தனும் சுமந்திரனும் சிதைத்து விட்டனர்!
மொட்டுடன் இணைகிறார் சுரேன் ராகவன்!
பஸில் இடத்துக்கு நாமல்!!
மேற்குலக ஆதரவை பெறவே ரணிலை மொட்டு பயன்படுத்துகிறது!!
விமானப் பயணிகளுக்கு அவசர அறிவிப்பு