அரசியல்
தம்மிக்க இராஜினாமா!!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான தம்மிக்க பெரேரா, எம்.பி. பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
மொட்டு கட்சியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ச, எம்.பி. பதவியை துறந்த பின்னர் ,அந்த இடத்துக்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார். அவருக்கு அமைச்சு பதவியும் வழங்கப்பட்டது.
அதன் பின்னர், கோட்டா ஆட்சியில் பிரதமராக செயற்பட்ட ரணிலை அவர் கடுமையாக விமர்சித்தார். ரணிலிடமிருந்து நிதி அமைச்சு பதவி பறிக்கப்பட வேண்டும் எனவும் தம்மிக்க பெரேரா வலியுறுத்தினார்.
கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு ஓடிய பின்னர், அமைச்சு பதவியை அவர் துறந்தார். தற்போது ரணில் ஜனாதிபதியாகியுள்ளார். இந்நிலையிலேயே எம்.பி. பதவியை துறக்க திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் இன்னும் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
மകிலspan>ெiv இமஒ2div id=mvp-side-wrap claslnaadi.com/news/local/2024/09/09/anurastros%3y150w" d8/11tyli022rasi-palan-today-11-augன50w"tpisces2rasilass="mvp-relat-head-wrap left relative">
! இண்டும
! இண்டும
You must be logged in to post a comment Login