அரசியல்
எனக்கு முதுகெலும்பு இருக்கிறது!! – சுமந்திரன் எம் பி காட்டம்


” ஒரு கூட்டு தீர்மானம் எடுத்தால் அதன் பொறுப்பு ,தீர்மானம் எடுத்த அத்தனை பேரையும் சாரும். அந்த பொறுப்பை எடுக்க மறுப்பவர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள். அந்த பொறுப்பை நான் தனியே சுமக்க நேரிட்டாலும் அதற்கும் நான் தயார். எத்தனை பேருக்கு முதுகெலும்பு இருக்கிறது என்று பார்போம்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று எடுத்திருந்தது. இந்த முடிவு குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையிலேயே சுமந்திரன் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.