இலங்கை
பாடசாலை விடுமுறை மேலும் நீடிப்பு


பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகள் திறக்கப்படும் திகதியினை மீண்டும் ஒத்திவைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டின் அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி திறக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், குறித்த திகதியினை ஒத்திவைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, அரச மற்றும் அரச அனுமதி பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளும் எதிர்வரும் 25 ஆம் திகதி திறக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.