அரசியல்
ஜனாதிபதி தெரிவு! – வேட்பு மனு தாக்கல் இன்று


புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளை 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று நடைபெறுகிறது. அதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் இன்று காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவின் தலைமையில் கூடுகிறது. வேட்புமனுத் தாக்களுக்களுக்காக மாத்திரமே நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. இதன் போது தெரிவத்தாட்சி அதிகாரியாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் செயற்படுவதோடு அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்களின் பெயர்கள் முன்மொழியப்பட இருப்பதாக அறிய வருகிறது.
புதிய ஜனாதிபதி தெரிவுக்கான போட்டியில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகப்பெரும, அனுர குமார திசாநாயக்க ஆகியோர் களமிறங்க தயாராக இருக்கின்றனர்.
நாளை வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.