அரசியல்
சபாநாயகராக மைத்திரி!! – டலஸ் – சஜித் தரப்பு கோரிக்கை


சபாநாயகர் பதவியை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்க வேண்டும் என டலஸ் – சஜித் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது என அரசியல் வட்டாரஙய்களில் இருந்து அறியமுடிகின்றது.
எனவே, ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பின்போது, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி டலஸை ஆதரிக்கும் என தெரியவருகின்றது. இதற்காக மத்திய குழு கூட்டமும் இன்று கூட்டப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்களில் நால்வர் அரச பக்கம் உள்ளனர். ஏனைய 10 பேரில் ஒருவர் ரணிலை ஆதரிக்கபோவதாக அறிவித்துள்ளார்.